இது எங்கள் கோட்டை… எத்தனை வேடம் போட்டாலும் கனவு பலிக்காது – முதல்வர் பழனிசாமி

Default Image

வெற்றிக்காக முக ஸ்டாலின் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார் என பரப்புரையில் முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சேலம் ஓமலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து இன்று  பரப்புரையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓமலூர் தொகுதி அதிமுகவின் கோட்டை என்று கூறி, திமுக தலைவர் முக ஸ்டாலின் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். அவர் போடாத வேடமே இல்லை, அத்தனை வேடம் போட்டு, எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறார் என விமர்சித்துள்ளர்.

இந்த அரசின் மீது குற்றசாட்டுகளை சொல்லி, அவதூறு பிரச்சாரத்தின் மூலமாக ஆட்சியை பிடித்துவிடலாம் என்று கனவு கொண்டியிருக்கிறார். அந்த கனவு பலிக்காது என தெரிவித்துள்ளார். அதிமுக மக்களுக்காக உழைக்கும் இயக்கம். கூட்டணி தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்ய கூடியவர்கள். ஒருமித்த கருத்துக்களை ஒன்றாக அமைத்த வெற்றி கூட்டணி என கூறியுள்ளார்.

திமுக காலத்திற்கு ஏற்றவாறு கூட்டணி அமைத்துக்கொள்வார்கள். அது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சித்தார். அம்மாவின் ஆட்சியை நான் சிறப்பாக வழிநடத்தி வருகிறேன். தமிழகத்தில் எத்தனையோ மாவட்டங்கள் இருக்கிறது. ஆனால், சேலம் மாவட்டத்தில் இருந்துதான் முதலமைச்சராக இருக்கிறோம். இது சேலத்துக்கு கிடைத்த பெருமை என கூறி வாக்கு சேகரித்தார் முதல்வர் பழனிசாமி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்