குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கோவையில் இஸ்லாமியர்கள் பங்குபெற்ற CAA எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டக் களத்தின் வழியாக சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வந்துள்ளனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர் ஒருவர் போராட்ட களத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் அவர்களுக்கான வழியை ஏற்படுத்தி ஐயப்பன் பக்தர்களுக்கு எந்தவொரு இடையூறு இல்லாமல் அனுப்பி வைத்தார்.
பின்னர் அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவிவருகிறது. இதை பார்த்தவர்கள், இதுதான் மதம் தாண்டிய மனிதன் என்றும் எல்லா இறைவனும் மனிதத்தை தான் போதிக்கிறான் என்பதை இந்த வீடியோ தெளிவாக கூறுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…