இது இந்தி அரசல்ல , இந்திய அரசு – கமல்ஹாசன் ட்வீட்

Default Image

இது இந்தி அரசல்ல, இந்திய அரசு என்று  கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

யோகா மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி வகுப்பு ஆன்லைன் மூலம் நடைபெற்றது.இந்த பயிற்சியில் இந்தியா முழுவதும் 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்  பங்கேற்றனர்.தமிழகத்தை சேர்ந்த 37  பேர் இதில் பங்கேற்றனர்.

அப்பொழுது  மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா  இந்தியில் பேசினார்.இந்த சமயத்தில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் குறுக்கிட்டு  ஆங்கிலத்தில் பேசும்படி தெரிவித்தனர்.ஆனால் ராஜேஷ் கொடேஜா,எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்று கூறி ,இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் கூறினார். இவர் இவ்வாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்து கொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை.அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்கவேண்டியது அரசின் கடமை.இது இந்தி அரசல்ல.இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்.வாழிய பாரதமணித்திருநாடு என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்