‘இது முடிவல்ல ஆரம்பம் தான்’ ..! தோல்விக்கு பின் விஜய் பிரபாகரனின் இன்ஸ்டா பதிவு..!!
விஜய் பிரபாகரன் : நாடுளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்றைய நாள் தொடங்கப்பட்டு நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக மக்களவை தொகுதிகளான 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே கைப்பற்றி உள்ளது. அதில் மக்களவை தொகுதியான விருதுநகரில் நேற்று நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது.
தொடக்கத்தில் முன்னிலையில் இருந்து வந்த விஜய் பிரபாகரன் இறுதியில், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளரான மாணிக்கம் தாகூரிடம் (3,85,256) 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 3,80,877 வாக்குகள் பெற்றிருந்தார். இதன் மூலம் குறைந்த வாக்குகள் வித்யாசத்தில் தோல்வியை தழுவி இருந்தார். இந்த தோல்விக்கு பிறகு விஜய் பிரபாகரன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில், “வாக்களித்த அனைத்து அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி கூறி, மன்னிக்கவும் தோழர்களே மிகக் குறைந்த வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளோம். இது முடிவல்ல ஆரம்பம் தான்”, என அவர் பதிவிட்டிருந்தார்.