என் மீது தேசத்துரோக வழக்கு போடுவது புதிது அல்ல. 3-வது முறையாக போட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கையும் நான் சட்டப்படியாக எதிர்கொள்வேன்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊரடங்கால் வறுமையில் வாடும் இவர்கள் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், உதவி கேட்டுள்ளனர். இதனையடுத்து, சீமான் அந்த குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்.
அதன் பின் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய சீமான், தி.மு.க.வினர் மதுவுக்கு எதிராக போராடுவது வேடிக்கையாக உள்ளது. அதிக சாராய ஆலைகள் வைத்திருப்பது அவர்கள் தான். நாங்கள் அரசுக்கு சாராயத்தை விநியோகிக்க மாட்டோம். சாராய ஆலைகளை மூடுவோம் என்று அவர்கள் சொல்லவே இல்லையே. இது மலிவான அரசியல் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என் மீது தேசத்துரோக வழக்கு போடுவது புதிது அல்ல. 3-வது முறையாக போட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கையும் நான் சட்டப்படியாக எதிர்கொள்வேன் என்றும், மத்திய சுகாதாரத்துறை மந்திரி கொரோனாவுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். இதை ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…