இது கொரோனோ இல்ல கர்மா – புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ட்வீட்.!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் தற்பொழுது இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இந்த கொரோனா வைரஸால் இந்தியா முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் 205 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி ஆளுநராக கிரண் பேடி கொரோனா வைரஸ் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், அவர் விலங்குகள் வெளியே இருப்பதும், மனிதர்கள் ஜெயிலில் இருப்பது போன்ற படத்தை பதிவிட்டு, “இது கொரோனோ இல்ல கர்மா” என கூறினார்.
Taking responsibility for who we consume?
It’s also about excercise of harmless choices.
Also about practicing non violence?
In word, deed and eat? @ANI @PTI_News @airnewsalerts pic.twitter.com/bGSji93qpi— Kiran Bedi (@thekiranbedi) March 19, 2020
மேலும் அவர் கூறுகையில், மனிதர்களான நாம், விலங்குகளைக் கொன்று அதன் இறைச்சியை உண்டு வருவதன் விளைவுதான் இந்த கொரோனா வைரஸ் என ட்விட்டர் பக்கத்தில் கிரண் பேடி பதிவிட்டுள்ளார். மேலும், இந்த செய்தி தனக்கு வாட்ஸ் அப்பில் வந்துள்ளதாக அந்த ட்வீடுக்கு விளக்கமளித்துள்ளார்.
The post is for personal choices. This has been shared from a Whataspp group. Best https://t.co/vbLAm0ijfO
— Kiran Bedi (@thekiranbedi) March 19, 2020