இன்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது.சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது.இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர் திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.இதன் பின்பு ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் கூட்டாக பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார்கள்.
இதன் பின்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இது பேரணி அல்ல ,போர் அணி. இதோடு நிறுத்தி கொள்ளாமல் கொடிய சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வில்லை என்றால் கூட்டணி கட்சி தலைவர்களோடு கட்சிக்கு அப்பாற்பட்ட தலைவர்களை ஒன்றிணைத்து மிக பெரிய போராட்டத்தை நடத்துவோம்.10000-க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் இந்த பேரணியில் பங்கேற்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர்.மேலும் விளம்பரம் கொடுத்த அதிமுக அரசுக்கும் எனது நன்றி என்று தெரிவித்தார்.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…
சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…