இது கருத்துக்கணிப்பு அல்ல.. கருத்து திணிப்பு – அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

Default Image

தமிழக சட்டபேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திரைப்பட இயக்குனர் கே.வி ஆனந்த் மற்றும் குணசித்திர நடிகர் செல்லத்துரை மறைவிற்கும் இரங்கல் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், நேற்று கருத்து கணிப்பு என்ற பேரில் ஒரு கருத்து திணிப்பு நடைபெற்றுள்ளது என விமர்சித்தார்.

இது கருத்து கணிப்பே இல்லை என்றும் பல கட்டங்களில் இந்த கருத்து திணிப்புகளை எல்லாம் தவிடுபொடியாக்கி அதிமுக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது என்று வரலாறு கூறும் என தெரிவித்துள்ளார். எனவே, கருத்து கணிப்புகளை தமிழக மக்கள் மற்றும் அதிமுக கருத்து திணிப்பகத்தான் பார்க்கிறார்கள் என கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கணிப்புகள் எந்த காலத்திலும் நிறைவேறியது இல்லை என்றும் அது வெறும் திணிப்பகத்தான் நிச்சம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்தபோது, அதிமுக 89 முதல் 101 இடங்களை கைப்பற்றும் என்றும் ஆட்சியை பிடிக்க முடியாது எனவும் இந்தியா டுடே ஆக்சிஸ் கருத்து கணிப்பை வெளியிட்டிருந்தது என கூறினார்.

அதில், திமுக 124 முதல் 140 வரை பிடிக்கும் கணிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். ஆனால், அப்போது கணிப்புகளை தாண்டி ஆட்சியை பிடித்தது மறந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுதான் என சுட்டிகாட்டனார். அதேபோல் நியூஸ் நேசன் என்ற ஊடகம், அதிமுக 95 முதல் 99 இடங்களை பிடிக்கும் என்றும் திமுக 118 முதல் 120 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டது.

ஆனால், அவர்களின் கருத்து கணிப்பு நிறைவேறவில்லை என்றும் விமர்சித்துள்ளார். இதுபோன்று கடந்த 2011 மற்றும் 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிட்டிருந்த பல்வேறு ஊடகங்களை பட்டியலிட்டு, அவர்கள் நடத்திய கணிப்புகள் நிறைவேறவில்லை என உதாரணங்களை சுட்டிக்காட்டினார்.

மேலும், இது எல்லாம் திணிப்புகளாகத்தான் பார்க்கிறோம் கணிப்பாக நாங்கள் பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு தொகுதிகளிலும் குறைந்தது 2 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில், வெறும் 200 பேர் இடம் கேள்விகள் கேட்கப்பட்டு, கருத்து கணிப்பு நடத்தப்படுகிறது என குற்றசாட்டினார்.

இதனிடையே, நேற்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பிரபல ஊடகமான ரிபப்ளிக் டிவி மற்றும் சிஎன்எக்ஸ் நடத்தி வெளியிட்டிருந்தது. அதில், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக: 160-170 = 48.91%, அதிமுக: 58-68 = 35.05%, அமமுக: 4-6 = 6.40%, மக்கள் நீதி மய்யம்: 0-2 = 3.62%, நாம் தமிழர்: 0 = – மற்றவை: 0 = 6.02% என தெரிவித்திருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்