இது #MakeinTamilnadu தான் ஆனால் #MadebyAmmaArasu – ஈபிஎஸ் ட்வீட்
ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கடந்த அம்மா அரசு ஆட்சியிலேயே போடப்பட்டது என ஈபிஎஸ் ட்வீட்.
ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒப்பந்த முறையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து கொடுக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது தங்களது முன்னணி மாடல் ஸ்மார்ட்போன்கள் அனைத்தையும் சென்னை ஆலையில் தயார் செய்ய தொடங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஐபோன் 13 தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுவது நமது பயணத்தின் மற்றொரு மைல்கல் என்று பதிவிட்டிருந்தார்
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கடந்த அம்மா அரசு ஆட்சியிலேயே போடப்பட்டது ஆனால் வழக்கம் போல் இதையும் தங்கள் சாதனை போல காட்டி கொள்ள முயலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன், இது #MakeinTamilnadu தான் ஆனால் #MadebyAmmaArasu’ என பதிவிட்டுள்ளார்.
ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கடந்த அம்மா அரசு ஆட்சியிலேயே போடப்பட்டது ஆனால் வழக்கம் போல் இதையும் தங்கள் சாதனை போல காட்டி கொள்ள முயலும் @mkstalin அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறேன்,
இது #MakeinTamilnadu தான் ஆனால் #MadebyAmmaArasu . pic.twitter.com/SwFpIiYLoZ— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 12, 2022