மாநில உணர்வுகள் இப்படித்தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது – கனிமொழி
ஆதாருக்காக தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதி மொழியோடு கட்டாயமாக்கப்பட்ட ஆதாரில் இன்று மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளன என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.இது, PVC அட்டை மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கிரேடிட் கார்டுகள் போல எளிதாக எங்கு வேண்டுமாலும் வைத்து கொள்ளலாம் எனவும், இதனை பெற UIDAI அமைப்பின் அங்கீகாரப் பூர்வமான வலைத்தளத்திற்கு சென்று, ரூ.50-ஐ கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது புதிதாக வழங்கப்படும் PVC ஆதார் அட்டையில் “எனது ஆதார் எனது அடையாளம்” என்ற தமிழ் வார்த்தைக்கு பதிலாக ஹிந்தியில் பதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழியில் எதை வேண்டுமானாலும், ஆதாருக்காக தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதி மொழியோடு கட்டாயமாக்கப்பட்ட ஆதாரில் இன்று மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளன. ஆதார் அட்டையைப் புதுப்பிப்போர் மற்றும் புதிய அட்டைகள் பெறுவோருக்கு வழங்கப்படும் ஆதார் அட்டையில், ” எனது ஆதார், எனது அடையாளம்” என்று வாசகம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. மாநில உணர்வுகள் இப்படிதான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மாநில உணர்வுகள் இப்படித்தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.#hindiimposition #AadharCard pic.twitter.com/cJxtB4EP0l
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 25, 2020