இது தமிழுக்கு செய்யும் அவமரியாதை..! இந்த முடிவு மிகவும் தவறானதாகும் – டாக்.ராமதாஸ் ட்வீட்

Published by
லீனா

தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என டாக்.ராமதாஸ் ட்வீட். 

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 – 10 வகுப்புகளுக்கான தமிழ் மொழிப் பாடத்திற்கான பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாக்.ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 – 10 வகுப்புகளுக்கான தமிழ் மொழிப் பாடத்திற்கான பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத் தேர்ச்சி விகிதம் குறைந்து வரும் வேளையில், இந்த முடிவு மிகவும் தவறானதாகும்!

வாரத்திற்கு ஒரு பாடவேளை நீதிபோதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க, தேவையான நடவடிக்கை. அதற்காக ஆங்கில பாடவேளையை குறைத்ததுடன் நிறுத்தியிருக்கலாம். தமிழ் பாடவேளையையும் குறைத்திருக்கத் தேவையில்லை. அது தமிழுக்கு செய்யும் அவமரியாதை!

எனவே, தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும். முன்பிருந்தவாறே வாரத்திற்கு 7 பாடவேளைகளை தமிழுக்கு ஒதுக்க வேண்டும். தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

தவெக மாநாடு : பணிகளை நேரில் பார்வையிட்டு ஆலோசனை நடத்திய விஜய்!

தவெக மாநாடு : பணிகளை நேரில் பார்வையிட்டு ஆலோசனை நடத்திய விஜய்!

விழுப்புரம் : தமிழகமே எதிர்நோக்கி காத்திருக்கும் தவெக கட்சியின் முதல் மாநாடானது இன்று விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. மேலும், மாநாட்டிற்க்கான…

10 mins ago

குழந்தைகள் செய்த செயல்! கடும் அதிர்ச்சியாகி மேடையை விட்டு ஓடிய சூர்யா!

சென்னை : கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில்…

10 hours ago

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா ?. அதன் மறைக்கப்பட்ட பல உண்மை வரலாறுகள் ..!

சென்னை : தீபாவளி பண்டிகையை ஏன் அனைத்து மக்களும்  கொண்டாடுகிறார்கள் ..அதற்கென கூறப்படும் பல  வரலாற்று காரணங்கள் பற்றி இந்த…

10 hours ago

த.வெ.க தலைவர் விஜயின் அரசியல் பேச்சுக்கள்..!

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு நாளை நடைபெற உள்ளது. தனது அரசியல் பயணத்தின் மிக…

10 hours ago

த.வெ.க மாநாட்டிற்கு செல்வோர் கவனத்திற்கு! இதற்கெல்லாம் அனுமதி இல்லை!

விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. கட்சியின் முதல் மாநாடு…

11 hours ago

IND vs NZ : “ரொம்ப வேதனையா இருக்கு” போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மா பேசியது என்ன?

புனே : நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை…

12 hours ago