இது யானைப்பசிக்கு சோளப்பொரி! – மநீம

Default Image

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது! ஆனால், இது யானைப்பசிக்கு சோளப்பொரி என மநீம அறிக்கை. 

ஆவின் பால் நிறுவனத்தில் வியாபார நோக்கத்திற்கு விநியோகிக்கப்படும் ஆரஞ்சு நிற பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டர் 48 ரூபாயிலிருந்து 60 ரூபாயாக உயர்த்தப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்த விலை உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் போன்ற அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இதுகுறித்து மநீம ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது! ஆனால், இது யானைப்பசிக்கு சோளப்பொரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவினின் வளர்ச்சி என்பது பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள், பொதுமக்களோடு தொடர்புடையது என்பதால் இனி வருங்காலங்களில் பால் கொள்முதல், விற்பனை விலை உயர்வு, பால் விற்பனைக்கான கமிஷன் தொகை இம்மூன்றையும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு போல் ஆண்டுதோறும் மாற்றியமைக்க அரசு ஆவண செய்திட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி வலியுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்