மக்களின் குரலே வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று – கமல் ட்வீட்
மக்களின் குரலே வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.
கடந்த 2018-ம் ஆண்டு நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த போராட்டத்தில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்புக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருமே வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று.’ என பதிவிட்டுள்ளார்.