இது திமுகவின் இரட்டை வேடத்திற்கு மற்றுமோர் சான்று! – ஓபிஎஸ்

Published by
லீனா

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை 

கிராஸ் காஸ்ட்  காண்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப் போவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் தங்களது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், சென்னை மாநகராட்சி தனியார் பேருந்து இயக்கம் தொடர்பான சாதக, பாதகங்கள் ஆய்வு செய்யப்படும். சாதக, பாதகங்கள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து ஆலோசனை நடத்தி 3 மாதத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். தனியார் பேருந்துகளால், அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது.அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படாது என தெரிவித்திருந்தார்.

சென்னை மாநகரில் தனியார் பேருந்துகள் இயக்குவதற்கு தொழிற்சங்கத்தினர்  தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதையடுத்து, CITU, LPF உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். மாநகரப் போக்குவரத்து கழகத்தின் தனியார் பங்களிப்புடன் பேருந்துகள் இயக்கும் கொள்கையை கைவிட வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.

ஓபிஎஸ் அறிக்கை

ops26

இந்த நிலையில், சென்னை மாநகரில் தனியார் பேருந்துகள் இயக்குவதற்கு ஓ.பன்னீர்செல்வவ்ம் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், ‘சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும்! எதிர்க்கட்சியாக இருந்தபோது தனியார்மயமாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு தனியார்மயமாக்க துடிப்பது திமுகவின் இரட்டை வேடத்திற்கு மற்றுமோர் சான்று!. என தெரிவித்துள்ளார். 

Published by
லீனா

Recent Posts

“தயவு செஞ்சி என்னை தொடாதீங்க”…மிஷ்கினுக்கு முத்தம் கொடுத்த நித்யா மேனன்!

சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…

9 minutes ago

களைகட்டிய மதுரை ஜல்லிக்கட்டு ஆன்லைன் விண்ணப்பம்! 5,347 வீரர்கள் முன்பதிவு!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…

58 minutes ago

ஒரே நாடு ஒரே தேர்தல் : இன்று கூடுகிறது நாடாளுமன்ற கூட்டுக்குழு!

டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …

1 hour ago

நேபாள் : பயங்கர நிலநடுக்கம் தற்போதைய நிலை என்ன?

நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

2 hours ago

இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமனம்!

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…

2 hours ago

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…

12 hours ago