இது திமுகவின் இரட்டை வேடத்திற்கு மற்றுமோர் சான்று! – ஓபிஎஸ்
சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை
கிராஸ் காஸ்ட் காண்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப் போவதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த முடிவுக்கு போக்குவரத்து சங்கங்கள் தங்களது கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், சென்னை மாநகராட்சி தனியார் பேருந்து இயக்கம் தொடர்பான சாதக, பாதகங்கள் ஆய்வு செய்யப்படும். சாதக, பாதகங்கள் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து ஆலோசனை நடத்தி 3 மாதத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். தனியார் பேருந்துகளால், அரசின் எந்தவொரு திட்டங்களும் பாதிக்கப்படாது.அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படாது என தெரிவித்திருந்தார்.
சென்னை மாநகரில் தனியார் பேருந்துகள் இயக்குவதற்கு தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதையடுத்து, CITU, LPF உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். மாநகரப் போக்குவரத்து கழகத்தின் தனியார் பங்களிப்புடன் பேருந்துகள் இயக்கும் கொள்கையை கைவிட வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.
ஓபிஎஸ் அறிக்கை
இந்த நிலையில், சென்னை மாநகரில் தனியார் பேருந்துகள் இயக்குவதற்கு ஓ.பன்னீர்செல்வவ்ம் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், ‘சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும்! எதிர்க்கட்சியாக இருந்தபோது தனியார்மயமாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு தனியார்மயமாக்க துடிப்பது திமுகவின் இரட்டை வேடத்திற்கு மற்றுமோர் சான்று!. என தெரிவித்துள்ளார்.
சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும்!
எதிர்க்கட்சியாக இருந்தபோது தனியார்மயமாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு தனியார்மயமாக்க துடிப்பது திமுகவின் இரட்டை வேடத்திற்கு மற்றுமோர் சான்று! pic.twitter.com/xScm23iLo8
— O Panneerselvam (@OfficeOfOPS) March 7, 2023