மத்திய பாஜக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த மாவட்டத்தில் வீரமணி என்ற அமைச்சர் ஒருவர் இருக்கிறார். முதல்வர் பழனிசாமி அமைச்சரவையில் மூன்று அருமையான மணிகள் இருக்கின்றனர், வேலுமணி, தங்கமணி, வீரமணி என்று விமர்சித்தார்.
அமைச்சர் வேலுமணி எதைப்பற்றியும் கவலைப்படாமல் அப்பட்டமாக ஊழல் செய்பவர். தங்கமணி மறைமுகமாக ஊழல் செய்வார். வீரமணி எப்படி ஊழல் செய்வார் என்பது உங்களுக்கு தெரியும். எல்லோருடைய பெயரிலும் மணி இருக்கிறது. அதனால் கரெப்ஷன், கமிஷன், கலெக்ஷன் இதுதான் அவர்களுடைய கொள்கை என தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. கொள்ளையடிப்பதுதான் அவருடைய தொழிலாக வைத்திருக்கிறார் என குறிப்பிட்டு பேசியுள்ளார். பாஜக அரசு, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பினாமிகள், உறவினர்கள் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது, அவர்களுடைய ஆதாரங்களைக் கைப்பற்றிக் கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். அதேபோல, அமைச்சர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். அதில் வீரமணியம் ஒருவர். ஆகையால், வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டும் அல்ல, சுயமரியாதை, தன்மானத்தை காப்பாற்றுவதற்கான தேர்தல் என தெரிவித்துள்ளார்.
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…