இது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி – அன்புமணி ராமதாஸ்
உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி இந்த விவகாரத்தில் இறுதி வெற்றியை தமிழக அரசு பெற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் என்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அரசியல் பிரபலங்கள் பலரும் வரவேற்று வருகின்றனர். அந்த வகையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி, உச்சநீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தி இந்த விவகாரத்தில் இறுதி வெற்றியை தமிழக அரசு பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி, உச்சநீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தி இந்த விவகாரத்தில் இறுதி வெற்றியை தமிழக அரசு பெற வேண்டும். #SterliteCase
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 18, 2020