ஆர்.எஸ்.எஸ்-பாஜக, சமத்துவத்திற்கு சமாதி கட்டும் ஒரு கொடும் காலத்தில் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு – ஜோதிமணி எம்.பி
அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு பேரவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட பலரும் வரவேற்பு அளித்தனர்.
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். ஆர்.எஸ்.எஸ்-பாஜக, சமத்துவத்திற்கு சமாதி கட்டும் ஒரு கொடும் காலத்தில் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு. மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! ‘ என பதிவிட்டுள்ளார்.
அண்ணல் அம்பேத்காரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். ஆர்.எஸ்.எஸ்-பாஜக, சமத்துவத்திற்கு சமாதி கட்டும் ஒரு கொடும் காலத்தில் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு. மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! #JaiBhim pic.twitter.com/NdjanglCCA
— Jothimani (@jothims) April 13, 2022