தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின், வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2-ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இவருக்கு சொந்தமான நிறுவனங்களில் வரி எய்ப்பு நடந்ததாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து வருமானவரித்துறையினர் சோதனை தொடர்ந்தது.
கடந்த 2ஆம் தேதி முதல் தொடங்கிய சோதனை அவரது வீட்டில் நேற்று நிறைவுபெற்றது. சென்னை , திருவண்ணாமலை உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்றது.
அமைச்சர் வீடு, அலுவலகம், அமைச்சரின் உறவினர்களின் வீடு, அலுவலகம், அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் வீடு, அலுவலகம், அருணை கல்லூரி வளாகங்களிலும் நடைபெற்றது. மேலும், தொடர்ந்து காசா கிராண்ட் நிறுவனம் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் போன்ற கட்டுமான நிறுவனங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அதனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. இந்த நேரத்தில் தீவிரமாக சோதனை நடத்து வதற்கான காரணம், தேவை என்ன இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டிப் பணிய வைப்பதற்கான நடவடிக்கையாக இது உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தற்போதைய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், சிறு தொழில் முதலாளிகள் உள்ளிட்டவர்களின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் நிதி திரட்டுவதற்காகத் தான் என்று மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…