எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டிப் பணிய வைப்பதற்கான நடவடிக்கையாக இது உள்ளது – கே.பாலகிருஷ்ணன்

Kbalakrishnan

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களின்,  வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2-ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இவருக்கு சொந்தமான நிறுவனங்களில் வரி எய்ப்பு நடந்ததாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து வருமானவரித்துறையினர் சோதனை தொடர்ந்தது.

கடந்த 2ஆம் தேதி முதல்  தொடங்கிய சோதனை அவரது வீட்டில் நேற்று நிறைவுபெற்றது. சென்னை , திருவண்ணாமலை உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்றது.

அமைச்சர் வீடு, அலுவலகம், அமைச்சரின் உறவினர்களின் வீடு, அலுவலகம், அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் வீடு, அலுவலகம், அருணை கல்லூரி வளாகங்களிலும் நடைபெற்றது. மேலும், தொடர்ந்து காசா கிராண்ட் நிறுவனம் மற்றும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் போன்ற கட்டுமான நிறுவனங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் அதனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. இந்த நேரத்தில் தீவிரமாக சோதனை நடத்து வதற்கான காரணம், தேவை என்ன இருக்கிறது? எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்டிப் பணிய வைப்பதற்கான நடவடிக்கையாக இது உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் தற்போதைய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், சிறு தொழில் முதலாளிகள் உள்ளிட்டவர்களின் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் நிதி திரட்டுவதற்காகத் தான் என்று மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இத்தகைய மிரட்டல் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்