“இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம் இது” – பினராயி விஜயன்.!
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என கேரள முதல்வர் பினராயி விஜயன கூறியுள்ளார்.

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் ஒன்றிய அரசு அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் தென்னிந்திய முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், பங்கேற்று பேசிய கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என தெரிவித்தார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. எண்ணிக்கை மட்டுமல்ல, இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம்.
தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறைவது பா.ஜ.க.வின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் எனவும், பன்முகத்தன்மையே நாட்டின் பலம். எனவே, தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு அவசியம் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.