‘இது வேட்டு வைக்கும் செயல்’ – ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள்..! ஆனால் அதில் வெற்றி பெற மாடீர்கள்..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என முதல்வர் ட்வீட். 

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என தெரிவித்துள்ளார். இவரது பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. 

இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்!’ என தெரிவித்துள்ளார். 

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

44 minutes ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

1 hour ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

3 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

3 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

4 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

5 hours ago