இது கண்துடைப்பு நாடகம்., மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் – மு.க.ஸ்டாலின்

புதுச்சேரியிலிருந்து கிரண்பேடி மாற்றப்பட்டது காலதாமதமான நடவடிக்கை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டது தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டிருப்பது மிகக் காலதாமதான நடவடிக்கை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுத்து நலத்திட்டங்களை முடக்கிய அவரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே தவறு.
மேலும், கிரண்பேடி தரம் தாழ்ந்த அரசியலைச் செய்ய அனுமதித்து, புதுச்சேரி வளர்ச்சியை முடக்கிப் போட்டிருந்தது பாஜக. மக்களை ஏமாற்ற கடைசி நேர கண்துடைப்பு நாடகம் இது. மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் இந்த நடவடிக்கை பாஜகவின் கபட நாடகம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய #KiranBedi மாற்றப்பட்டிருப்பது மிகக் காலதாமதான அறிவிப்பு.
கிரண்பேடி தரம் தாழ்ந்த அரசியலைச் செய்ய அனுமதித்து, புதுச்சேரி வளர்ச்சியை முடக்கிப் போட்டிருந்தது பாஜக!
மக்களை ஏமாற்ற கடைசி நேர கண்துடைப்பு நாடகம் இது! மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்!
— M.K.Stalin (@mkstalin) February 17, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025