இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது – விஜயகாந்த் வேதனை

Default Image

இனி வரும் காலங்களில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் அறிக்கை. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ஆம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வில் 50,674 மாணவ, மாணவிகள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

விஜயகாந்த் வேதனை

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 49 ஆயிரத்து 599 மாணவர்கள் எழுதவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடா – தமிழகமா என்று விவாதிப்பவர்கள் தமிழ் மொழியின் மகத்துவத்தை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தமிழ் மொழி தேர்வை மாணவர்கள் எழுதாது குறித்து தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து, அதற்கு தீர்வு காண வேண்டும்.

இனி வரும் காலங்களில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தலின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருவது போல், தேர்வுகள் மீது மாணவர்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்