யுஜிசி விதிகளில் இதற்க்கு இடமில்லை…! ஆளுநரின் அதிரடி பேட்டி…!
ஆளுநருக்கு பதில் பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமிப்பதற்கு யூஜிசி விதிகளில் இடம் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு மனித வள மேம்பாடு, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, தொழில் மற்றும் வறுமை ஒழிப்பு போன்றவற்றில் முன்னிலை வகிக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினுடனும், தமிழ்நாடு அரசுடனும் தனக்கு நல்லுறவு இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வித்துறை தொடர்பான தமிழக அரசின் மசோதாக்கள் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநருக்கு பதில் பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமிப்பதற்கு யூஜிசி விதிகளில் இடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை ஆளுநருக்கு பதில் மாநில அரசே நியமிக்கும் மசோதா கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டு, மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.