இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா.!

Kalaignar100

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் இன்று மாலை 6 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்க உள்ளனர்.

மேலும் இந்த விழாவில், மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு மௌன அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தவர்.

இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில், இந்த பிரம்மாண்ட விழாவுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட 24 சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன. பல ஆண்டுகளுக்குப் பிறகு 24 சங்கங்கள் சார்பில் இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறுவது பலரது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளை கலைஞர் நூற்றாண்டு விழா: பங்கேற்கும் தென்னிந்திய பிரபலங்கள்.!

இந்த நிகழ்வில் தென்னிந்திய பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அதன்படி, இந்தி திரையுகில் இருந்து அமிதாப் பச்சன், மலையாள திரையுலகில் இருந்து மோகன் லால், மம்முட்டி ஆகியோருக்கும் கன்னட பட உலகிலிருந்து சிவராஜ் குமார், தெலுங்கு திரையுலகிலிருந்து சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்