தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு முரணாக அனைத்து வகுப்புகளையும் திறக்க அரசு அவசரம் காட்டுவது ஏன்? என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் ஒரு மாதத்திற்கும் பின் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் இன்று 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தமிழக அரசின் இந்த முடிவு பெற்றோருக்கு மகிழ்ச்சியோ, மனநிறைவோ அளிக்கவில்லை. மாறாக அச்சத்தையும், பதற்றத்தையும் தான் ஏற்படுத்தியிருக்கிறது!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கலாம். ஆனால், திரும்பிய திசையெல்லாம் கொரோனா பாதிப்பை பார்க்க முடிகிறது. இத்தகைய சூழலில் பள்ளிகளைத் திறந்து தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது!
பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. சில மாநிலங்களில் உயர்நிலை வகுப்புகள் தான் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு முரணாக அனைத்து வகுப்புகளையும் திறக்க அரசு அவசரம் காட்டுவது ஏன்?
பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளை நேரடியாக நடத்துவதில் நியாயம் உள்ளது. மற்ற வகுப்புகளுக்கு அதற்கானத் தேவையில்லை. எனவே, 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பை கொரோனா நிலைமை சீரடையும் வரை ஒத்திவைக்க வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…