தமிழக அரசின் இந்த முடிவு மக்கள் நலனுக்கு எதிரானது! – பாமக நிறுவனர் ராமதாஸ்

Default Image

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் குடிப்பகங்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்தத் தீர்ப்பை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.

தமிழக அரசின் இந்த முடிவு மக்கள் நலனுக்கு எதிரானது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி குடிப்பக உரிமம் நிறைவடைந்துள்ள மற்றும் உரிமம் இல்லாத 3719 குடிப்பகங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும். மற்றவை 6 மாதங்களில் மூடப்பட வேண்டும். இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வேண்டாம் என பாமக கோரிய போதிலும் தமிழக அரசு செய்திருக்கிறது.

ஒருபுறம் ரூ.4500 கோடிக்கு மதுவிலைகள் உயர்வு, மறுபுறம் புதிய மதுக்கடைகள் திறப்பு, இன்னொருபுறம் குடிப்பகங்களை மூடுவதற்கு எதிரான மேல்முறையீடு போன்ற அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது மதுவணிகத்தை நம்பித் தான் இந்த அரசு செயல்படுகிறதோ? என்ற எண்ணம் ஏற்படுகிறது.

இது நல்லதல்ல! குடிப்பகங்களை மூடும் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். வருவாய்க்கான மாற்றுத் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். மதுக்கடைகளை படிப்படியாக மூடி தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்