மநீம உறவுகளே! இ துதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கமுடியும் – கமலஹாசன் ட்வீட்

மநீம உறவுகளே, மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்துள்ளது.
இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்களின் பிறந்தநாளான இன்று, ‘ மநீம உறவுகளே, மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்; அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கமுடியும்.’ என ட்வீட் செய்துள்ளார்.
மநீம உறவுகளே, மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்; அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கமுடியும்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 7, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025