வெளியான அதிரடி கருத்துக்கணிப்பு!!மக்களவை தேர்தலில் வெற்றிபெறப்போவது இந்த கூட்டணியா …..

Published by
Venu
  • மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • டைம்ஸ் நவ், விஎம்ஆா் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி,  இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

Image result for aiadmk dmk

அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 20 தொகுதிகளிலும் , பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் , பா.ம.க. 7 தொகுதிகளிலும் , தே.மு.தி.க. 4 தொகுதிகளிலும் , த.மா.கா, புதிய தமிழகம், மற்றும் புதிய நீதிக்கட்சி,என்.ஆர்.காங்கிரஸ் தலா 1  தொகுதிகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.பாமக தொகுதிகளின் வேட்பாளரை பட்டியலை வெளியிட்டுள்ளது.தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார்.அதேபோல் தேமுதிகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதேபோல்  மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம் வெளியானது.  மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.அதேபோல் மதிமுக,விசிக, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் ஐஜேகே  ஆகிய கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில்  டைம்ஸ் நவ், விஎம்ஆா் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட  கூட்டணி கட்சிகள் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ், கூட்டணி 34 தொகுதிகளில் வெற்றிபெறும்.அதேபோல்  அதிமுக-பாஜக  கூட்டணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

 

Recent Posts

IND vs SA : போராடிய இந்திய அணி… திருப்பிக் கொடுத்த தென்னாபிரிக்கா! தொடரை சமன் செய்து அசத்தல்!

ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…

5 hours ago

டெல்லி கணேஷ் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!!

டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…

11 hours ago

பாகிஸ்தான் குண்டு வெடிப்பு : ஒப்புக்கொண்ட பயங்கர அமைப்பு! உயரும் பலி எண்ணிக்கை!

பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…

11 hours ago

ஓ சொல்றியா மாமாவை ஓரம் கட்டுவாரா ஸ்ரீ லீலா? விரைவில் “Kissik” பாடல்!

சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…

12 hours ago

“தயவு செஞ்சு போட்டோ எடுக்காதீங்க”…விராட் கோலி வைத்த கோரிக்கை!!

மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…

12 hours ago

பிரேமலதா தலைமையில் தேமுதிக மா.செ கூட்டம்! 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…

12 hours ago