உடனடியாக இந்த தடையை நீக்க வேண்டும் – டாக்.ராமதாஸ்

Default Image

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் அரசியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என டாக்.ராமதாஸ் ட்வீட். 

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் அரசியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு அதன் பதிவாளர் தடை விதித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து டாக்.ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ‘சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் அரசியல் சார்ந்த செயல்பாடுகளுக்கு அதன் பதிவாளர் தடை விதிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமையை பறிக்கும் செயலாகும்!

உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் அரசியலுக்கு முக்கியத்துவம் உண்டு. தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தான் அரசியலை வளர்த்தன; அவை தான் அரசியல் நாற்றங்கால்களாக திகழ்ந்தன. அவற்றை சிதைக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது!

தமிழக அரசின் சுற்றறிக்கைப்படி தான் இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியிருக்கிறார். இந்தத் தடைக்கு யார் காரணமாக இருந்தாலும் அது தவறு தான். தடை விதிக்க தூண்டியதா? என்பது தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்!

அரசியலும் ஓர் அறிவு தான். அரசியல் செயல்பாடுகளால் பல்கலைக்கழகம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது; மாறாக பண்படும். எனவே, பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் அரசியல் செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்