நிலக்கரி சுரங்க திட்டம் ரத்து என்று மத்திய அரசு இன்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது, நன்றிக்குறியது என ஜி.கே.வாசன் ட்வீட்.
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள வடசேரி, மகாதேவப்பட்டணம், உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை, கீழ்க்குறிச்சி, அண்டமி, நெம்மேரி, கொடியாளம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில், டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து ஜி.கே.வாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் டெல்டா மண்டலத்தை உறுதியோடு பாதுகாக்கும் விதமாக நிலக்கரி சுரங்க திட்டம் ரத்து என்று மத்திய அரசு இன்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது, நன்றிக்குறியது. என பதிவிட்டுள்ளார்.
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…