தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது – ஜி.கே.வாசன்
தமிழக அரசு தஞ்சாவூர் பெரியகோயிலை எழுப்பிய மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்தநாளான சதய விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்ததற்கு ஜி.கே.வாசன் வரவேற்பு.
மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜி.கே.வாசன் அவர்களும் வரவேற்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக அரசு தஞ்சாவூர் பெரியகோயிலை எழுப்பிய மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்தநாளான சதய விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்ததை தமாக சார்பில் வரவேற்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.
#தமிழகஅரசு,#தஞ்சாவூர் பெரியகோயிலை எழுப்பிய மாமன்னர் #ராஜராஜசோழன் அவர்களின் பிறந்தநாளான #சதய_விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்ததை #தமாகா சார்பில் வரவேற்கிறோம். #gkvasan #tamilmaanilacongress #tmc #TNPolitics #rajarajachozhan #RajaRajaCholan #thanjaiperiyakovil pic.twitter.com/Z3eTtiAODb
— G.K.Vasan (@TMCforTN) November 3, 2022