உச்சநீதிமன்றத்தின் இந்த செயல் நீதித்துறையின் மீதான நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது – திருமாவளவன்
நூபுர்சர்மாவின் இழிசெயலை உச்சநீதிமன்றம் கண்டித்திருப்பது நீதித்துறையின் மீதான நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது என திருமாவளவன் ட்வீட்.
நுபுர் சர்மா தன் மீதான வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், சர்மாவின் பேச்சுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இது குறித்து, நீதிபதிகள் கூறுகையில், நுபுர் சர்மா மற்றும் அவரது வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி உள்ளது. உதய்பூரில் நடந்த படுகொலைக்கு நுபுர் சர்மாவின் செயல்பாடுகள் தான் காரணம் என்று கூட்டம் குற்றம் சாட்டியுள்ளார். எனவே இவர் நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒட்டுமொத்த நாட்டையும் பற்றி எரிவதற்கு நுபுர் சர்மா தான் காரணமாக உள்ளார். ஆனால் நிவாரணம் கூறி அவர் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார். அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறதா அல்லது அவர் ஒட்டுமொத்த நாட்டிற்கு அச்சுறுத்தல் கொடுத்திருக்கிறாரா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றக் கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் இனி நாடு முழுவதும் உள்ள வழக்குகளை அனைத்தையும் அவர் நேரில் சென்று எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாராட்டு தெரிவித்து திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நூபுர்சர்மாவின் இழிசெயலை உச்சநீதிமன்றம் கண்டித்திருப்பது நீதித்துறையின் மீதான நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது. அவரின் வெறுப்புப் பேச்சுதான் உதய்ப்பூர் கொலைக்குக் காரணம் என்பதையும் சுட்டிக்காட்டியதோடு அவர் மன்னிப்புக் கோர வேண்டுமெனவும் அறிவுறுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.’ என பதிவிட்டுள்ளார்.
நூபுர்சர்மாவின் இழிசெயலை உச்சநீதிமன்றம் கண்டித்திருப்பது நீதித்துறையின் மீதான நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது. அவரின் வெறுப்புப் பேச்சுதான் உதய்ப்பூர் கொலைக்குக் காரணம் என்பதையும் சுட்டிக்காட்டியதோடு
அவர் மன்னிப்புக் கோர வேண்டுமெனவும் அறிவுறுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. pic.twitter.com/Zr1neQ1LWh— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 1, 2022