காவல்துறையின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது – டாக்.ராமதாஸ்
எதற்காக இந்த நடவடிக்கையோ, அந்த இலக்கை எட்ட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என டாக்.ராமதாஸ் ட்வீட்.
தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு டாக்.ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கஞ்சா வேட்டை 3.0 நடைபெற்றுவருவதாகவும், 403 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எதற்காக இந்த நடவடிக்கையோ, அந்த இலக்கை எட்ட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!’ என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இனி கஞ்சா இல்லை என்ற நிலையை கஞ்சா வேட்டை 3.0 உறுதி செய்ய வேண்டும். கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளிக்க வசதியாக மூன்று இலக்க இலவச தொலைபேசி அழைப்பு எண்ணை உருவாக்கி அறிவிக்க வேண்டும்!(5/5)@CMOTamilnadu
— Dr S RAMADOSS (@drramadoss) December 17, 2022