மக்களின் உயிரோடு விளையாடும் இந்த செயல் கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்
மக்களின் உயிரோடு விளையாடும் இந்த செயல் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் ட்வீட்.
சென்னை நகர் முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் கே.கே நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்த வழியாக சென்ற காரின் மீது மரம் , வங்கி மேலாளர் வாணி கபிலன் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னை மாநகரின் பல இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் இல்லாமல் மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்படும் கால்வாய் பணிகள் மக்களைக் காவு வாங்கும் அளவிற்குச் சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
கே.கே நகரில் நேற்று மரம் விழுந்து வங்கி பெண் மேலாளர் திருமதி.வாணி பலியானதற்கு கால்வாய் தோண்டப்படும் பணிகளில் காட்டப்பட்ட அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதற்கேற்றார்போல் பல பகுதிகளில் கால்வாய் தோண்டப்படும் இடங்கள் எவ்வித தடுப்புமின்றி திறந்தே கிடப்பதை பார்க்கமுடிகின்றது. மக்களின் உயிரோடு விளையாடும் இந்த செயல் கண்டனத்திற்குரியது. இதன்பிறகாவது உரிய முன்னெச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் இப்பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்துகிறேன். (4/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) June 25, 2022