திமுக அரசின் இந்த செயல் ஈவு இரக்கமற்ற செயல் – வானதி சீனிவாசன்

Default Image

மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வேண்டுகோள். 

தமிழகத்தில், புதிய மின் கட்டண உயர்வு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மின்கட்டணத்தை திரும்ப பெறுமாறு அரசியல் பிரபலங்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், திமுக அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பது, பொதுமக்களுக்கு மட்டுமல்ல, குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினருக்கும் பேரிடியாக அமைந்துள்ளது சில இடங்களில் மட்டும் கண் துடைப்புக்காக கருத்து கேட்புக் கூட்டங்களை மின் வாரியம் நடத்தியது.

அரசின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல், முறைகேடுகளால் ஏற்பட்ட நஷ்டத்தை, சாதாரண மக்கள், தொழில் துறையினர் மீது சுமத்துவது ஈவு இரக்கமற்ற செயல் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital
Gold Price today