5 ரூபாய் மட்டுமே வாங்கி மருத்துவம் செய்து வந்த திருவேங்கடம் வீரராகவன் மாரடைப்பால் காலமாகியுள்ளார்.
கடந்த 1973ல் ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ படிப்பை முடித்த திருவேங்கடம் வீரராகவன் முதலில் 2ரூபாய்க்கு தனது மருத்துவ சேவையை தொடங்கினார். அதனையடுத்து 5 ரூபாயாக உயர்த்திய இவரது இந்த மருத்துவ சேவைக்கு மருத்துவர்கள் பலர் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 5 ரூபாய் வாங்கி கொண்டு சிகிச்சை அளித்து வருகிறார். எருக்கஞ்சேரியில் காலை 9 மணி முதல் 12 மணி வரையும், வியாசர்பாடியில் மாலை 7.30லிருந்து 9 மணி வரையும் மருத்துவம் பார்த்து வந்தார்.
5 ரூபாய் மட்டுமே வாங்கி சிகிச்சை அளிப்பதை குறித்து அவர் கூறிய போது, நான் கட்டணம் இல்லாமல் தான் மருத்துவம் படித்ததாகவும், எனவே தனது சேவையும் கட்டணம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் என்றும் கூறினார். இவரது இந்த சேவையை பாராட்டி கடந்த 2017ல் சிறந்த மனதருக்கான விருதை அரசு வழங்கியது 70 வயதான இவர் நேற்றைய தினம் மாரடைப்பால் காலமாகியுள்ளார். இவருக்கு ஓய்வு பெற்ற ரயில்வே உழியருமான மனைவியும்,மருத்துவத்துறையில் பணிபுரியும் தீபக் மற்றும் ப்ரீத்தி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…