திருவாரூர் தேர்தல் :ஸ்டாலின் திடீர் கருத்து…! கருத்துகளை கேட்ட பிறகே, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும்…!

Default Image

அனைத்து கட்சிகள், திருவாரூர் விவசாய பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்க வேண்டும் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதி:

திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக இறந்தார்.இந்நிலையில் அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெறும் சூழ்நிலை இருந்தது.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு :

பின் ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கும்.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3-ஆம் தேதியும், மனுதாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10-ஆம் தேதி என்றும், ஜனவரி 11-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களை பெறலாம் என்றும், மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14-ஆம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து அறிவித்த இந்திய  தேர்தல் ஆணையம்  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரண பணிகளை தொடரலாம் நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் அரசியல் கட்சியினர் பங்கேற்க கூடாது மேலும் நிவாரண பணிகளில் எந்த அரசியல் தொடர்பும் இருக்க கூடாது, தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு அனுமதி அறிவித்தது.திருவாரூர் தேர்தல் அதிகாரியிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை கேட்டுள்ளார். அதேபோல் நீதிமன்றங்களில் தேர்தலை தடைசெய்ய வேண்டும் என்றும் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், அனைத்து கட்சிகள், திருவாரூர் விவசாய பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். கருத்துகளை கேட்ட பிறகே, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்   தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்