வெளிநாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தமிழக இளைஞர்.! கலெக்டரிடம் குடும்பத்தார் மனு.!
கத்தாரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராஜகோபாலன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் ராஜகோபாலன் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.
வெளிநாட்டு வேலை என்று சென்று அங்கு எதோ சில காரணங்களால் உயிரிழக்கும் தமிழர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அண்மையில் தான் குவைத் நாட்டில் கொல்லப்பட்ட முத்துக்குமார் உடல் தமிழகத்திற்கு வந்து சோகத்தில் ஆழ்த்தியது.
தற்போது, கத்தார் நாட்டில் தமிழக இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த இளைஞர் ராஜகோபாலன், தந்தை இறந்த பிறகு, குடும்ப சூழ்நிலை காரணமாக கத்தார் நாட்டிற்கு 2 மாதத்திற்க்கு முன்னர் வேலைக்கு சென்றுள்ளார்.
அங்கு ஒரு லாண்டரி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், அவர் கத்தாரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ராஜகோபாலன் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவரது குடும்பத்தார் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது ராஜகோபாலன் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் ராஜகோபாலன் குடும்பத்தார் மனு கொடுத்துள்ளனர்.