திருவாரூர் முருகனை விசாரிக்க தமிழக போலீசாருக்கு அனுமதி!
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் 2-ந் தேதி அதிகாலை ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளைப்போனது. பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக கோட்டை குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கோசல்ராமன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருச்சி டிசி மயில்வாகணன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பானவர்களை போலீசார் விசாரணை செய்து, பின் கைது செய்து அவர்கள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தான். பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட அவனை அங்குள்ள வழக்குகள் தொடர்பாக போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
திருச்சி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பாக திருச்சி கோர்ட்டில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1-ல் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து, விசாரணைக்காக பெங்களூரு சிறையில் இருந்து அழைத்து வர கோர்ட்டில் வாரண்ட் பெற்று சென்றனர்.
பெங்களூரு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்து திருவாரூர் முருகனை திருச்சி அழைத்து செல்ல, கீழ் கோர்ட்டில் அனுமதி கிடைக்காத நிலையில், மேல்கோர்ட்டில் அனுமதி கேட்ட நிலையில், 16-ம் தேதி முருகனை அழைத்து சேலை அனுமதி கிடைத்துள்ளது.
இதனையடுத்து, போலீசார் பலதத பாதுகாப்புடன் முருகனை பெங்களூரு சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில், நகைக்கடையில் கொள்ளைப்போன 28 கிலோ தங்க நகை, ஒரு கிலோ வைர நகைகளில் இதுவரை 27 கிலோ 800 கிராமை போலீசார் மீட்டுள்ளனர். இதனையடுத்து மீதமுள்ள நகையை மீட்பதற்கான விசாரணை நடைபெறவுள்ளது.