இந்த மாவட்டத்தில் மார்ச் 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 15 ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாயன்மார்களால் பாடப் பெற்ற தலங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில், தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இத்திருவிழாவின் சிறப்பு நிகழ்வான ஆழித்தேரோட்டம் வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த நிலையில்,அன்றைய தினத்தில் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.அதன்படி,ஆழித்தேரோட்டம் அன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.