திருவண்ணாமலை கிரிவலம் – 20,000 பக்தர்களுக்கு அனுமதி!
திருவண்ணாமலை கிரிவலத்துக்கு 15,000 வெளியூர் பக்தர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மலையில் ஏறி சென்று மகா தீபத்தை தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்வதற்கும் தடையை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியூரை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கலாம் எனவும், உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரையும் அனுமதிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் கோவிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பில்லை எனவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.