+2 தேர்வில் அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் திருவண்ணாமலை ஆட்சியர்!
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த திருவண்ணாமலை ஆரணி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி அடுத்த பத்தியவரம் எனும் கிராமத்தில் உள்ள அமலாக்கராணி என்ற பார்வையற்றோர் பள்ளி இயங்கி வருகிறது, இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்றோர் தங்கி பயின்று வருகின்றனர். அண்மையில் வெளியாகிய பிளஸ் டூ தேர்வில் சீனிவாசன் என்ற மாணவன் 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதன்மையாக வந்துள்ளார்.
இதனை அறிந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அவர்கள் ஆரணி அடுத்த பத்திரம் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு நேரில் சென்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஸ்மார்ட்போன், வாக்கிங் ஸ்டிக் ஆகியவற்றை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பார்வையற்ற பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தன் கையால் உணவு வழங்கி உள்ளார். மேலும் மன நலம் குன்றியவர்களுக்கு சானிடைசர் , மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.