கந்துவட்டி காரணமாக பெண்ணின் 3 மாத கைக்குழந்தை மற்றும் மூதாட்டியை கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்னாமலை அருகே கந்துவட்டி விவகாரத்தில் பெண்ணின் 3 மாத கைக்குழந்தை மற்றும் மூதாட்டியை கடத்தி தனியறையில் அடைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவத்தில் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
கந்துவேட்டிக்கு ஆளான இச்சம்பவம் திருவண்ணாமலை பே – கோபுரம் 4வது தெருவைச் சேர்ந்தவர் பாரதி இந்நிலையில் அதே தெருவில் வசிக்கும் மணிகண்டன் என்பவரிடம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 38 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடன் பெற்ற தொகைக்கான உரிய வட்டியை முறையாகச் செலுத்தி வந்த நிலையில், வட்டியுடன் சேர்த்து பாரதி 80 ஆயிரம் ரூபாயை தரவேண்டும் எனக் கூறிய மணிகண்டன், அவர்கள் வசிக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி கேட்டதாகக் கூறப்படுகிறது.
மணிகண்டனின் இந்த முடிவுக்கு பாரதி மறுப்பு தெரிவிக்கவே இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பாரதியின் 3 மாத கைக்குழந்தையையும், பாரதியின் பாட்டியான குப்பு என்பவரையும் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று தனது வீட்டில் உள்ள தனியறையில் அடைத்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாரதி இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் தனியறையில் அடைக்கப்பட்டிருந்த 3 மாத குழந்தை மற்றும் மூதாட்டி குப்புவையையும் மீட்ட போலிசார் அவர்களை பாரதியிடம் ஒப்படைத்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கந்துவேட்டிக்கு ஆசைப்பட்டு கொள்ளை கொள்ளும் கயவர்கள் மத்தியில் அவர்களின் வலையில் சிக்கி தவிக்கும் சமானியர்கள் இது போன்ற சம்பவங்களில் சிக்கி தவிக்கின்றனர்.
DINASUVADU
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…