திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் சென்னையில் இருந்து திருவண்ணாமலை கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் தொடர் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வெளிமாநில கொள்ளையர்கள் ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரை திருவண்ணாமலை காவல்துறை தனிப்படை பிரிவினரின் தீவிர விசாரணைக்கு பின்னர் நேற்று கைது செய்தனர். அவர்களை ஹரியானா மாநிலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வந்தனர்.
ஐஜி விசாரணை : ஏடிஎம் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகிய இருவரும் தற்போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை கொண்டு வரப்பட்டுள்ளனர். அங்கு வடக்கு மண்டல ஐஜி கண்ணன், திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கொள்ளையர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றவர்களுக்கு வலைவீச்சு : இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்களையும் கண்டறிந்து கைது செய்ய காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணை வளையத்திற்க்குள் குஜராத்தை சேர்ந்த 6 பேரும், பெங்களூருவில் 2 பேரும் இருக்கின்றனர் என கூறப்படுகிறது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…