திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பம்!
திருவண்ணாமலையில் ஏ.டி.எம். கொள்ளையர்கள் திருப்பதியில் கார் திருடியது அம்பலம்.
ஏ.டி.எம் கொள்ளை – திருப்பதியில் கார் திருட்டு:
திருவண்ணாமலையில் ஏ.டி.எம்-யில் கொள்ளையடித்தவர்கள் திருப்பதியில் டாடா சுமோ காரை திருடி வந்தது தெரிய வந்துள்ளது. திருப்பதியில் காரை திருடி கொண்டு வந்து திருவண்ணாமலையில் ஏடிஎம்-யில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். டாடா சுமோ மட்டுமில்லாமல் மற்றொரு காரையும் வேறு இடத்தில் இருந்து கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு:
திருப்பதியில் கார் திருடப்பட்டது தொடர்பாக முத்தியால்ரெட்டி பள்ளி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கொள்ளையர்கள் எப்படி வந்து காரை திருடினார்கள் என்பதை சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு ஆராய்ந்து வருகின்றனர்.
ஏடிஎம்-யில் கொள்ளை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு முன்பு 4 ஏ.டி.எம்.களில் ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. வெளிமாநில கொள்ளையர்கள் போலி பதிவு எண் கொண்ட டாடா சுமோவில் வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்த்து, தீவிர வாகன தணிக்கை மற்றும் தனியார் விடுதிகளில் சோதனை நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார். கொள்ளையர்களை பிடிக்க தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் விடிய விடிய வாகன தணிக்கையில் காவல்த்துறையினர் ஈடுபட்டனர்.
டிஜிபி சைலேந்திர பாபு தகவல்:
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது ஹரியானவை சேர்ந்தவர்கள் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி, கொள்ளையர்களை அடையாளம் கண்டுவிட்டோம். அவர்களின் முழு விவரம் கிடைத்துள்ளது. விரைவில் பிடித்து கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை மீட்டுவிடுவோம் என்றும் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், திருவண்ணாமலையில் ஏ.டி.எம். கொள்ளையர்கள் திருப்பதியில் கார் திருடியது அம்பலமாகியுள்ளது.