திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை – 2 பேருக்கு 14 நாள் சிறை!
ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை:
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப், அவனது கூட்டாளி ஆசாத் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள 4 ஏடிஎம் மையங்களை உடைத்து ரூ.72.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
போலீஸ் காவல்:
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது ஆரிப் மற்றும் ஆசாத்தை காவலில் எடுத்து போலீஸ் விசாரித்து வந்தது. கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. எஞ்சிய ரூ.70 லட்சம் எங்கே பதுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்த சமயத்தில் ஏடிஎம் கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் இருவரை கைது செய்தது காவல்துறை.
நீதிமன்றம் காவல்:
ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஹரியானவை சேர்ந்த கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப், கூட்டாளி ஆசாத் ஆகிய இருவரையும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நீதிபதி கவியரசன் உத்தரவிட்டார். போலீஸ் விசாரணை முடிந்த நிலையில் முகமது ஆரிப், ஆசாத்தை குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தியது. இந்த நிலையில், ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரை 14 நாள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.