தி.மலையில் மற்றொரு இடத்தில் நிலச்சரிவு.. கரைந்தோடும் மணல்.. பதபதக்க வைக்கும் வீடியோ!

திருவண்ணாமலை வஉசி நகரில் ஏற்பட்ட நிலச்சரிவின் கோரக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tiruvannamalai - Land slide

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் சிதம்பரம், மலையடிவாரம், வ.உ.சி. நகரில், தொடர் கனமழையால், 3 வீடுகள் பூமிக்குள் புதைந்துள்ளன. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதைந்த வீடுகளுக்கு மேல் பெரிய பாறை ஒன்று உருளும் நிலையில் உள்ளதால், மீட்புப் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், அந்த வீடுகளில் சிக்கிய 5 குழந்தைகள் உட்பட 7 பேரின் நிலை என்ன என்று தெரியாத நிலையில், மீட்பு நடைபெற்று வரும் சூழலில், மீண்டும் அதே இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்புப் பணிகள் தாமதமாகியுள்ளன.

ஆம், மண் சரிவு ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில், அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, மலைப்பகுதியில் இருந்து ஓடிச்செல்கின்றனர்.

இதனிடையே, திருவண்ணாமலை மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்த இடத்தில் மீட்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு,” திருவண்ணாமலையில் 59 ஆண்டுக்கு பிறகு அதிக மழை பெய்துள்ளது. பாறைகள் சரிந்ததை தொடர்ந்து, மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் குழு வர உள்ளனர்” என்று தகவல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்