திருவள்ளுவர் சிலையை உடனே சீரமைக்க வேண்டும்- முதலமைச்சருக்கு எம்.பி. ரவிக்குமார் கடிதம்
- கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.
- திருவள்ளுவர் சிலை முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும் அதனை உடனடியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் பழனிச்சாமிக்கு விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளுவரை சிறப்பிக்கும் விதமாக தமிழக அரசு திருவள்ளுவருக்கு குமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது 133 அடி உயரத்தில் அவருக்கு சிலை அமைத்தது. இந்த சிலை அமைக்கும் பணி 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 6 -ஆம் தேதி தொடங்கப்பட்டு 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும் அதனை உடனடியாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் பழனிச்சாமிக்கு விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், திருவள்ளுவர் தினந்தன்று கூட மின் விளக்குகள் இன்றி திருவள்ளூவர் சிலை உள்ள இடம் இருளடைந்து கிடந்தது .ஆனால் அருகில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு மின் விளக்கு அலங்காரங்கள்,படகு சேவை நடந்துகொண்டிருக்கும்போது திருவள்ளுவர் சிலை மட்டும் பராமரிப்பு இன்றி கிடப்பது பாரபட்சமானது.தாங்கள் தலையிட்டு இந்தக் குறைகளை களையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.